Showing posts with label தகவல்கள். Show all posts
Showing posts with label தகவல்கள். Show all posts

Saturday, March 08, 2014

பொதுஅறிவு

நேபாளத்தின்
தேசியக்கொடி முக்கோண
வடிவிலிருக்கும்...

ஆல்பிரட் நோபல்
( நோபல் பரிசுகள் இவர்பெயரால்
கொடுக்கப்படுகின்றன)

1866 ஆம் ஆண்டு டைனமைட்டை
கண்டுபிடித்தார்...

கொசு நம்மைத்தேடி
வரும்போது விநாடிக்கு 250
முதல் 600 தடவைகள் வரை
அதன் சிறகுகளை அடித்துக்
கொள்ளும்...

சராசரியாக 6 விநாடிகளுக்கு
ஒருமுறை நாம் கண்களை
இமைக்கிறோம்...

பொதுஅறிவு

நிறமில்லாத ரத்தத்தைக்
கொண்ட பூச்சியினம்

" கரப்பான் "பூச்சி

பிளாஸ்டிக் உடைவதற்கு
500 ஆண்டுகள் ஆகின்றன...

கொட்டாவி விடும்
போது நாக்கை தொட்டால்
கொட்டாவி நின்று விடும்...

மனித நாக்கில் உள்ள சுவை
அரும்புகளின் சராசரி வாழ்நாள்
08 முதல் 10நாட்கள் மட்டுமே...

இந்தியவின் மிகப்பெரிய
மாநிலம்

" உத்திரபிரதேசம் "

ஒரு தக்காளி, 15 லிட்டர்
தண்ணீரை உறிஞ்சுகிறது..

இந்த " உறிநீர்' அளவு
( வெர்ச்சுவல் வாட்டர் )
எல்லாவற்றுக்கும் பொருந்தும்...

பொது அறிவு

உலகில் மிக பழமையான
பாராளுமன்றம் உள்ள நாடு..
" ஐஸ்லாந்து "

மரங்கொத்தி பறவையால்
மரத்தை ஒரு நொடியில் 20
முறை தொடர்ந்து கொத்த
முடியும்...

கரப்பான் பூச்சி 35
கோடி ஆண்டுகளாக வடிவம்
மாறவில்லையாம்...

பல்வேறு இசைக்கருவி
புத்தளிப்புக் கருவிகளை
ஒன்றாக வாசித்தல்...
" பல்லியம் "

பழைய பெயர் இன்றும் அன்றும்...
மதுரை – மாதுரையும் பேரூர்...
உலகில் எவனுக்கும் கடன்
படாத நாடு..
" லிபியா "

Tuesday, February 25, 2014

அறிய வேண்டிய தகவல்கள்!

 1)பிறக்கும்போது மனித உடலில் 300 எலும்புகள் உள்ளனவாம்;வளர்ந்த பின் 206 தான் உள்ளனவாம்!(94 ஐ யாரோ திருடிட்டுப் போயிட்டாங்க போல)

2)மனித இதயம் ஒரு நாளைக்கு 1,00,000 தடவைக்கு மேல் துடிக்கிறதாம்

3)தலை வெட்டுப்பட்டாலும் ஒரு கரப்பு பல நாட்கள் வாழுமாம்;கடைசியில் அது பட்டினியால் சாகிறதாம்!

4)பூமியின் எடை-6,600,000,000,000,000,000,000 டன்களாம்.

5)ஒரு சதுரக் காகித்த்தை ஏழு தடவைக்கு மேல் பாதியாக மடிக்க முடியாதாம்,

6)கிளினோஃபோபியா என்பது படுக்கையைக் கண்டு பயப்படுவதாம்

7)ஒரு வயலினில் கிட்டத்தட்ட 70 மரத்துண்டுகள் உள்ளனவாம்

8)மின்னலால் உண்டாகும் சூடு,சூரியனின் பரப்பில் உள்ள சூட்டை விட 5 மடங்கு அதிகமாம்.

9)சமாதானத்துக்கான நோபல் பரிசு மெடலில் தோள் மேல் கை போட்டு நிற்கும் மூன்று நிர்வாண ஆண்களின் உருவம் உள்ளதாம்

10)உலகில் மிக அதிகமாக உள்ள பெயர் முகமது என்பதுதானாம்

11)சீட்டுக் கட்டில் ஆட்டின் ராஜாவுக்கு மட்டும் மீசை இல்லையாம்.

12)மின்சார பல்ப் கண்டு பிடித்த எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயமாம்

13)உலகில் 10 லட்சம் விதமான மிருகங்கள் உள்ளனவாம்

14)ஒரு சராசரி மனிதன் ஒரு ஆண்டில் 1460க்கும் மேற்பட்ட கனவுகள் காண்கிறானாம்.

15)முள்ளம்பன்றிகள் தண்ணீரில் மிதக்குமாம்.

16)சூரியன் ,பூமியை விட 330330 மடங்கு பெரியதாம்.

17)காட்டுத்தீ,மலையில் கீழ் நோக்கிப் பரவுவதை விட,மேல் நோக்கி வேகமாகப் பரவுமாம்.

18) ஒரு 75 வயது மனிதன் வாழ்வில் 23 ஆண்டுகள் தூங்கியிருப்பானாம்!

18+1))ஆக்டோபஸ்ஸுக்கு 3 இதயங்கள் உள்ளனவாம்

Thursday, February 07, 2013

வியக்க வைக்கும் தகவல்கள்

நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.


... சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.