Tuesday, February 04, 2014
புன்னகை தேசம்
எவ்வளவு சிந்தினாலும்
தீர்வதில்லை
அள்ளக்குறையாத புன்னகை
மொட்டாகவேயிருந்து
நீ பார்த்தபின்பே
மலர்கின்றன இதழ்கள்
நான் அதிகம் அணிந்திடாத
புன்னகையை அணிவித்து
அழகு பார்ப்பது நீ
என் புன்னகையின் மதிப்பு
உயர்ந்துகொண்டேயிருக்கும்
உன்னிடத்தில் மட்டும்
உனக்கு நகைச்சுவையுணர்வு அதிகமாம்
சுவைக்கக்கூடுமென்ற காத்திருப்பில்
புன்னகை இதழ்கள்
Gauthaman DS Karisalkulaththaan
தீர்வதில்லை
அள்ளக்குறையாத புன்னகை
மொட்டாகவேயிருந்து
நீ பார்த்தபின்பே
மலர்கின்றன இதழ்கள்
நான் அதிகம் அணிந்திடாத
புன்னகையை அணிவித்து
அழகு பார்ப்பது நீ
என் புன்னகையின் மதிப்பு
உயர்ந்துகொண்டேயிருக்கும்
உன்னிடத்தில் மட்டும்
உனக்கு நகைச்சுவையுணர்வு அதிகமாம்
சுவைக்கக்கூடுமென்ற காத்திருப்பில்
புன்னகை இதழ்கள்
Gauthaman DS Karisalkulaththaan
Subscribe to:
Posts (Atom)

