Thursday, February 28, 2013
வணிக நிலையங்கங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்:
பிற
மொழிப்பெயர்கள் - தமிழ்ப் பெயர்கள்
1 டிரேடரஸ்
: வணிக மையம்
2 கார்ப்பரேஷன்
: நிறுவனம்
3 ஏஜென்சி
: முகவாண்மை
4 சென்டர்
: மையம், நிலையம்
5 எம்போரியம்
: விற்பனையகம்
6 ஸ்டோரஸ்
: பண்டகசாலை
7 ஷாப்
: கடை, அங்காடி
8 அண்கோ
: குழுமம்
9 ஷோரூம்
: காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல்
ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி
11 டிராவல்
ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ்
: போக்குவரத்து
நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ்
: மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங்
சென்டர் : சீர்செய் நிலையம்
15 ஒர்க்
ஷாப் : பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ்
: நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ்
: மரக்கடை
18 பிரிண்டரஸ்
: அச்சகம்
19 பவர்
பிரிண்டரஸ் : மின் அச்சகம்
20 ஆப்செட்
பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ்
: வண்ண அச்சகம்
22 கூல்
டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம்,
குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட்
ஸ்டால் : இனிப்பகம்
24 காபி
பார் : குளம்பிக் கடை
25 ஹோட்டல்
: உணவகம்
26 டெய்லரஸ்
; தையலகம்
27 டெக்ஸ்டைலஸ்
: துணியகம்
28 ரெடிமேடஸ்
: ஆயத்த ஆடையகம்
29 சினிமா
தியேட்டர் : திரையகம்
30 வீடியோ
சென்டர் : ஒளிநாடா மையம்,
விற்பனையகம்
31 போட்டோ
ஸ்டூடியோ : புகைப்பட நிலையம்,
நிழற்பட நிலையம்
32 சிட்
பண்ட் : நிதியகம்
33 பேங்க்
: வைப்பகம்
34 லாண்டரி
: வெளுப்பகம்
35 டிரை
கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்
36 அக்ரோ
சென்டர் : வேளாண் நடுவம்
37 அக்ரோ
சர்வீஸ் : உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் : குளிர்
பதனி, சீர்வளி
39 ஆர்டஸ்
: கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ்
: கல்நார்
41 ஆடியோ
சென்டர் : ஒலியகம், ஒலிநாடா
மையம்
42 ஆட்டோ
: தானி
43 ஆட்டோமொபைலஸ்
: தானியங்கிகள்,
தானியங்கியகம்
44 ஆட்டோ
சர்வீஸ் : தானிப் பணியகம்
45 பேக்கரி
: அடுமனை
46 பேட்டரி
சர்வீஸ் : மின்கலப் பணியகம்
47 பசார்
: கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி
பார்லர் : அழகு நிலையம்,
எழில் புனையகம்
49 பீடா
ஸ்டால் : மடி வெற்றிலைக்
கடை
50 பெனிஃபிட்
பண்ட் : நலநிதி
வணிக நிலையங்கங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்:
பிற மொழிப்பெயர்கள் - தமிழ்ப் பெயர்கள்
51 போர்டிங் லாட்ஜத்ங் : உண்டுறை விடுதி
52 பாய்லர்
: கொதிகலன்
53 பில்டரஸ்
: கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள்
: கம்பிவடம், வடம்
55 கேபஸ்
: வாடகை வண்டி
56 கபே
: அருந்தகம், உணவகம்
57 கேன்
ஒர்கஸ் : பிரம்புப் பணியகம்
58 கேண்டீன்
: சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட்
: பைஞ்சுதை
60 கெமிக்கலஸ்
: வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட்
: சீட்டு நிதி
62 கிளப்
: மன்றம், கழகம்,உணவகம்,
விடுதி
63 கிளினிக்
: மருத்துவ விடுதி
64 காபி
ஹவுஸ் : குளம்பியகம்
65 கலர்
லேப் : வண்ணக்கூடம், வண்ண
ஆய்வம்,
66 கம்பெனி
: குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ்
: வளாகம்
68 கம்ப்யூட்டர்
சென்டர் : கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட்
ஒர்கஸ் : திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன்
: கூட்டு நிறுவனம்
71 கூரியர்
: துதஞ்சல்
72 கட்பீஸ்
சென்டர் ; வெட்டுத் துணியகம்
73 சைக்கிள்
: மிதிவண்டி
74 டிப்போ
: கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர்
: ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் : உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ்
: மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ்
: மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம்
: விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ்
: முனைவகம்
81 சைக்கிள்
ஸ்டோரஸ் : மிதிவண்டியகம்
82 பேக்டரி
: தொழிலகம்
83 பேன்சி
ஸ்டோர் : புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட்
புட் : விரை உணா
85 பேகஸ்
: தொலை எழுதி
86 பைனானஸ்
: நிதியகம்
87 பர்னிச்சர்
மார்ட் : அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ்
: உடைவகை
89 ஹேர்
டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்
90 ஹார்டு
வேரஸ் : வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி
: நகை மாளிகை
92 லித்தோ
பிரஸ் : வண்ண அச்சகம்
93 லாட்ஜ்
: தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட்
: சந்தை அங்காடி
95 நர்சிங்
ஹோம் : நலம் பேணகம்
96 பேஜர்
: விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ்
: வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர்
ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்
99 பாஸ்
போர்ட் : கடவுச்சீட்டு
100 பார்சல்
சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம்,
சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய்
102 பார்மசி
: மருந்தகம்
103 போட்டோ
ஸ்டூடியோ : ஒளிபட நிலையம்
104 பிளாஸ்டிக்
இன்டஸ்ட்ரி : நெகிலி தொழிலகம்
105 பிளம்பர்
: குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ்
: ஒட்டுப்பலகை
107 பாலி
கிளினிக் : பலதுறை மருத்துவமனை,
பலதுறை மருந்தகம்
108 பவர்லும்
: விசைத்தறி
109 பவர்
பிரஸ் : மின் அச்சகம்
110 பிரஸ்,
பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட்
: தாவளம், உணவகம்
112 ரப்பர்
: தொய்வை
113 சேல்ஸ்
சென்டர் : விற்பனை நிலையம்
114 ஷாப்பிங்
காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்
115 ஷோரூம்
: காட்சிக்கூடம்
116 சில்க்
அவுஸ் : பட்டு மாளிகை
117 சோடா
பேக்டரி : வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி
: மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ்
: வங்குநர்,
120 ஸ்டேஷனரி
: தோல் பதனீட்டகம்
121 டிரேட்
: வணிகம்
122 டிரேடரஸ்
: வணிகர்
123 டிரேடிங்
கார்ப்பரேஷன் : வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ்
: பயண ஏற்பாட்டாளர்
125 டீ
ஸ்டால் : தேனீரகம்
126 வீடியோ : வாரொளியம், காணொளி
127 ஒர்க்
ஷாப் : பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ்
: படிபெருக்கி,
நகலகம்
129 எக்ஸ்ரே
: ஊடுகதிர்
அவசரகால மருத்துவ குறிப்புகள் :
1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது.படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை ...தண்டுவடம்பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அதுபாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும்சிக்கலாக்கிவிடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாககட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாகசேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்புஇருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்துஇருக்கிறது.
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலிநிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக்கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம்.புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்புவகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ்அதிகமாக உள்ளது.
5.எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாகசெல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாகமுதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.
6.எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்கஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும்சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகுசாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமேஉதவும்.
7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்புஉடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரைவழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும்.கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடிநடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அதுதவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம்அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனேடாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும் கூட காரணமாகஇருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகுநன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரைமணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்'செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லைஇருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக...
10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கிகால்சியம் சத்தை அதிகரிக்கும்.

Subscribe to:
Posts (Atom)