Showing posts with label மருத்துவ குறிப்புகள். Show all posts
Showing posts with label மருத்துவ குறிப்புகள். Show all posts

Friday, September 20, 2013

வெந்தயக்கீரை



சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை . இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்து...ப் பலன் தந்துவிடும். கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூக்கும் முன்னரேயே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறமுடையது.

சுமார் இரண்டரை அடி வரை வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இதை துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம்.

வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும்.

குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது. வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும்.

நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும். இந்தக் கீரையை வதக்கி அதனுடன் வாதுமைப் பருப்பு, கசகச கோதுமை ஆகியவற்றைச் சேர்த்துப் பால்விட்டு அரைத்து நெய்விட்டுக் கிண்டி உட்கொண்டால் உடலுக்கு வலிமையும், வனப்பும் ஏற்படும்.

இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து உண்டால் மார்பு வலி, மூக்கடைப்பு ஆகிய நோய்கள் நீங்கும். மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும். இந்தக் கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும்.

வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது.


சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது. வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்

Thursday, August 29, 2013

குங்கும பூ

இரத்தம் சுத்தமடைய

குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள். இரத்தச் சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.

குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு

பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.

நன்கு பசியைத் தூண்ட

குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.

குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.

கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

தரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/- க்கு விற்பனையாகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால், அவர்களது குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது நம்பிக்கை. அதே குங்குமப்பூ சுகப்பிரசவத்திற்கும் உதவுகிறது.

* ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவம் எளிதில் ஆகாமல் அவதிப்பட நேரிடும்போது, அவருக்கு சிறிதளவு குங்குமப் பூவைச் சோம்பு நீரில் கரைத்து உட்கொள்ளக் கொடுத்தால் உடனே பிரசவம் ஏற்படும்.

* அதோடு, பெண்களின் மாதவிலக்கு வலியைப் போக்கும் குணமும் குங்குமப்பூவிற்கு உண்டு.மேலும், குங்குமப்பூவில் அழகின் ரகசியமும் ஒளிந்துள்ளது.

* குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

* குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.


* நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.

Thursday, August 22, 2013

எண்ணெய்களின் மருத்துவ குணங்கள் :


எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணை உணவுப் பொருளாகவும், மருந்து பொரு ளாகவும், வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. எளிதாக சருமத்துக்குள் ஊடு ருவக்கூடியது. இதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழும். மேலும் சரு மத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்தி, உடல் வெப்பத்தை தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட் ராலைக் குறைக்கிறது. ட்ரை ஸ்கின் கொண்டவர்கள் அடிக்கடி தேய்த்து குளிப்பது நல் லது.

பழங்குடியினரால் பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் எண்ணை... நீலகிரித் தைலம். காயங்களில் பாக்டீரியாக்களால் ஏற்படும் சீழ்வடிதலைத் தடுக்கும். உடலில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் மார்பு சளி, கோழை சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கும். தலைவலி, ஜலதோஷம் போன்றவற்றை நீக்கும்.


விளக்கெண்ணையை சருமத்தின் மீது பூசினால் உடல் குளிர்ச்சி ஏற்படும். தலைக்கு தடவும்போது கேசத் துவாரங்களை ஊடுருவிச் சென்று கேச வளர்ச்சியை ஊக்கு விக்கிறது. கண்களின் ரப்பைகள், புருவ முடிகள் வளரவும், கண்களுக்கு குளிர்ச்சிïட்டி தூக்கத்தை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது. உடல், கண், மூக்கு, காது, வாய் ஆகியவற்றில் உண்டாகிற எரிச்சலை நீக்கும்.

தேங்காய் எண்ணையை கருஞ்சீரகத்துடன் அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நோய்கள் தீரும். கேசத்திற்கு ஊட்டமும், வளர்ச்சியும், குளிர்ச்சியும் கொடுக்கிறது. சருமத்தை மென்மையாக்கும். சமையலில் தேங்காய் எண்ணையை சேர்ப்பதால் நமது உட லுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.

உடலுக்கு வனப்பும், ஆரோக்கியமும் அளிக்கக் கூடியது பாதாம் எண்ணை. அனைத்து வைட்டமின் சத்துக்களும், குறிப்பாக தோலுக்கு அழகூட்டும் வைட்டமின் `இ' சத்தும் இதில் அதிகமாக காணப்படுகின்றன. பாதாம் எண்ணையை பெண்கள் தங்கள் உடல் மீது தேய்த்து வர சீக்கிரமே தோலின் பளபளப்பு அதிகரிக்கும்.

ஆலிவ் எண்ணை சருமத்திற்கு வெண்மையும், கேசத்துக்கு போஷாக்கும் அளிக்கிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி முதலான ஊட்டச்சத்துகளும், தாதுப் பொருட்களும் அடங்கியுள்ளன. அதனால்தான் பழங்காலத்தில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஆலிவ் கனியை உண்டதுடன், ஊறுகாயாகவும் பயன்படுத்தினர். ஆலிவ் எண்ணையை அதிகமாக சேர்த்துக் கொண்டனர்.

நிறமும், மணமும் அற்ற திரவம் கிளிசரின். சருமத்தின் ஈரப்பதத்தையும், தளர்ச்சியும் கொடுக்கக் கூடியது. கை, கால்களுக்கு மிருதுவான தன்மையை அளிக்கக் கூடியது. காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் கிளிசரின் சினிமா, தொலைக் காட்சிகளில் வரும் அழுகை காட்சிகளுக்கு அதிகமாக பயன்படுத்தப் படுகிறது.

கோக்கோ எனும் தாவரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் வெண்ணை போன்ற கொழுப்புச் சத்துள்ள பொருளே கோக்கோ பட்டர். இது சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. புரதச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் தாதுப் பொருட்கள் மிகுந்திருப்பதால் சரு மத்திற்கான மாஸ்க் தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது.

வேப்ப எண்ணை சிறந்த கிருமி நாசினி. தோல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகள், தொற்று நோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. வாரம் ஒரு முறை வேப்ப ணீஎண்ணையை அளவோடு தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சி அடையும். குழந்தைகளுக்கும் வேப்ப எண்ணை மிகவும் நல்லது.

கடுகு எண்ணை சருமத்திற்கு வனப்பை அதிகரிக்கும். அதனால்தான் அழகூட்டும் சோப்புகளில் கடுகு எண்ணை சேர்க்கப்படுகிறது. உணவிலும் சேர்த்துக் கொண்டால் இளமை கூடும். தோல் மற்றும் தோலுக்கு அடுத்துள்ள சதைப் பிடிப்புகளிலும் கடுகு எண்ணை ஒரு நிவாரணியாக பயன்படுகிறது.

Tuesday, March 26, 2013

மாமரத்தின் மருத்துவ குணங்கள்



சிவாலயங்களில் தல விருட்சமாக விளங்குகிறது. மாமரத்தின் பூர்வீகம் இந்தியாதான். இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.
இந்துக்கள் பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர மா இலை சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.

கிருமிநாசினியான மாவிலை :

கொழுந்து இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும். நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.

மாம்பூவும், பட்டையும் :

மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும். இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.

மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.

பித்த வெடிப்பு குணமாகும் :

பித்த வெடிப்பினால் கால் வலி ஏற்படுவதோடு பாதங்கள் பார்ப்பதற்கே அருவெறுப்பாக காணப்படும். கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.

ஜீரண சக்தி அதிகரிக்கும் :

மாம்பழம் அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. இதனை கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம். கோடைக்காலத்தில் அதிகம் விளையும் மாங்கனி மிகுந்த சுவை கொண்டது. மலச்சிக்கலைப் போக்கும், சீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.

உதிரப்போக்கு கட்டுப்படுத்தும் :

மாங்கொட்டை பருப்பை எடுத்து காயவைத்து பொடித்து கஷாயம் செய்து மாதவிலக்குக் காலத்தில் அருந்தினால், அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும். வயிற்றுப் புழுக்கள் நீங்கி, வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு குணமாகும். மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.

மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்

புற்றுநோய்

மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் எதிர்த்துப் போராடுவதிலும், சரும சுருக்கத்தைப் போக்குவதிலும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது.

கண்கள்

மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், தெளிவாக கண் பார்வையைப் பெறலாம்.

கொலஸ்ட்ரால்

மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

நீரிழிவு

மாம்பழம் என்ன தான் இனிப்பாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளது. அதாவது மாம்பழத்தை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

முகப்பரு

மாம்பழமானது சருமத்திற்கு மிகவும் சிறந்தது. அதிலும் இவை பருக்களை மட்டுமின்றி, கரும்புள்ளிகளை நீக்குவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் கோடையில் மாம்பழ ஃபேஷியல் மிகவும் பிரபலமானது. ஏனெனில் அவை உடலில உள்ள வெப்பத்தை வெளியேற்றி, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

நோய் எதிர்ப்பு

மாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் அதிலும் பச்சை மாங்காய் சளி மற்றும் இருமலுக்கு பெரிதும் சிறப்பான தீர்வைத் தரும்.

ஆரோக்கிய இதயம்

மாம்பழமானாலும் சரி, மாங்காயாக இருந்தாலும், இதனை சாப்பிட்டால் இதயமானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் பச்சை மாங்காயை நறுக்கி, நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைப் பருகி வந்தால், இதய நோய், மாரடைப்பு போன்றவை வராமல் இருக்கும்.



Wednesday, March 20, 2013

உலர்ந்த திராச்சை


திராட்சை பழங்களில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள்.

ஆரம்ப காலத்தில் அயல் நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த தால் இதற்கு கிசுமுசுப் பழம் எனப் பெயரிட்டனர்.! பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயா சம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மருத்துவக் குணங்கள்:

1. இதில் விட்டமின் மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.!*

2. உலர்ந்த திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப் பாதுகாப்புக்குரியதாக்கும்.
*
3. குழந்தைகளுக்கு எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கல்சியம்தான். கல்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது.
*
4. இரத்த விருத்திக்கு எலும்பு மச்சைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மச்சைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.!
*
5. உடல் வலி குணமாக பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.
*
6. கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.!
*
7. பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சினை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கஷாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும். மலச்சிக்கல் தீரமலச்சிக்கலே நோய்கள் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு காலம் நோயின்றி வாழலாம்.
*
8. வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் ஜீரண உறுப்புகள் வலு விழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சினை தீராது. இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும்.
*
9. குடற்புண் ஆறஅஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவறை புண்ணாக்கி விடுகின்றன.!இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடற் புண்கள் குணமாகும்.
*
10. இதயத் துடிப்பு சீராக சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதற்றத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.
*
11. சுகமான நித்திரைக்கு தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.
*
12.தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

இது போன்ற எண்ணற்ற நல்ல பல தகவலை தந்து கொண்டு இருக்கும் சகோதரி பரமக்குடி சுமதி அவர்களுக்கு இன்று ஒரு தகவல் சார்பாக நமது நன்றியே தெரிவித்து கொள்கிறோம்