Thursday, February 28, 2013

அவசரகால மருத்துவ குறிப்புகள் :

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது.படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும்ஒருவேளை ...தண்டுவடம்பாதிக்கப்படாமல் இருந்துநீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அதுபாதிப்படையலாம்உடல் பாகங்கள் செயல் இழந்துநிலைமையை மேலும்சிக்கலாக்கிவிடும்

2. எலும்பு முறிவு ஏற்பட்டால்எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாககட்டுப்போட்டு கொள்ளாதீர்கள்ஏனென்றால்எலும்புகள் கோணல்மாணலாகசேர்ந்துகொள்ளவும்தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்புஇருக்கிறதுஇதனால்... கால்கள் கோணலாககுட்டையாக மாறக்கூடிய ஆபத்துஇருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணிமாதக் கணக்கில் வலிநிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையைவாரக்கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிடபுரொட்டீன்ஸ் மிக முக்கியம்.புரொட்டீன்ஸ் புடவை எனில்அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம்பருப்புவகைசோயாகாளான்முட்டைஇறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ்அதிகமாக உள்ளது.

5.எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர்மிக மெதுவாகசெல்ல வேண்டும்வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாகமுதுகுகழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.

6.எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும்அதன்பிறகு மெள்ள வலுவிழக்கஆரம்பிக்கும்எனவேகுழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும்சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும்அதன் பிறகுசாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமேஉதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்புஇடுப்பு எலும்புஉடைந்து போக வாய்ப்பு அதிகம்வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரைவழவழப்பாக இருக்கக் கூடாதுநல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும்.கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம்எனவேஅவர்கள் எதையாவது பிடித்தபடிநடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடுஎன்பார்கள்அதுதவறுஒருவேளைஎலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால்நீவி விடுவதன் மூலம்அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலிகீழ் முதுகுவலிகழுத்துவலி போன்றவை வந்தால் உடனேடாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும் கூட காரணமாகஇருக்கலாம்அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகுநன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள்அரைமணி நேரத்துக்கு ஒரு முறைஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்'செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள்இவ்வளவுக்குப் பிறகும் தொல்லைஇருந்தால்டாக்டரைப் பார்க்கலாம்.

பெண்களுக்காக...
10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பதுஎலும்புகளை வலுவாக்கிகால்சியம் சத்தை அதிகரிக்கும்.

No comments: