காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில்
அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித்
தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று
மிளநீரும்
பத்துப்
பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே
வேணும்;-நல்ல
முத்துச்
சுடர்போலே-நிலாவொளி
முன்புவர
வேணும்?அங்கு
கத்துங்
குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட
வேணும்;-என்றன்
சித்தம்
மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர
வேணும்.
பாட்டுக்
கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப்
பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக்
களியினிலே-கவிதைகள்
கொண்டுதர
வேணும்;-அந்தக்
காட்டு
வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற
வேணும்;என்தன்
பாட்டுத்
திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட
வேணும்.
மகாகவி
பாரதியார்.
No comments:
Post a Comment