எங்கிருந்து
தான் வருமோ
அத்தனை
வேகத்தடைகள்
நீயும்
நானும் பேசிக்கொண்டு
இருக்கையில்
எப்போதும்
பேசவே பேசாத
ஒருவன்
அவசரம் யென்று
அலைப்பேசியில்
அழைத்து
அடம்பிடித்து
பேசிக்கொண்டே
இருக்கிறான்
பிறகு பேசுகிறேன் என்று
முடித்து
உன் பக்கம்
திரும்புகையில்
எவனோ
ஒருவன்
வழிமறந்தவன்
நம்மிடையே
உள்புகுந்து
முகவரி
விசாரிக்கிறான்
தப்பு தப்பாக வழிச்சொல்லி
அவசரமாக
அவனை
வழியனுப்பி
விட்டு
மீண்டும்
உன்னிடத்தில்
பேச ஆரம்பிக்கும் போது
சவாரிக்கு
ஆள் பிடிக்கும்
ஆட்டோகாரன்
ஒருவன்
சார் ஆட்டோ என்னும் போது
எனக்குள்
ஏற்படும் எரிச்சலைக்
கண்டே சிரித்தே விடுகிறாய்
திரும்பவும்
ஏதோ பேசிக்கொண்டு
இருந்தோமே
என்று நான்
ஆரம்பிக்கையில்
மொத்த பூக்களையும் உனக்காகவே
கட்டி எடுத்து வந்த மாதிரி
பூக்காரி
ஒருத்தி நம்முன்
வந்து நின்றாள்
அவசரத்தில்
பேரமே பேசாமல்
கொள்முதல்
செய்து அவளையும்
வழியனுப்பி
மீண்டும் உன்னுடன்
பேச தொடங்குகையில் நீ
சொன்ன வார்த்தையில்
எனக்கும்
தான் பேச்சு
வரவே இல்லை
அந்த ஐஸ்கிரிம்காரனை
என்னை ஏன் கூப்பிட
சொன்னாய்!!!!!
வெங்கடேசன் பாலகிருஷ்ணன்
வேட்டவலம்
No comments:
Post a Comment