Friday, February 15, 2013

அழகிற்கு காரணம் சந்தனம்


எகிப்தின் மகாராணி நேபர்டிடியை அழகுபடுத்திய தமிழக சந்தனம்.
  


உலகின் அழகான பெண் என இன்று வரை கொண்டாடப்படும் கிளியோபாத்ராவிற்கு உருவச்சிலை கிடையாது, துட்டுக்கு பாடிய கவிஞன் ஒருவனால் அவள் பேரழகி என புகழப்பட்டாள் என்று ஒரு வதந்தி உண்டு, ஆனால் உலக வரலாற்றில் உன்னதமான ஒரு அழகி இருந்தால் அவளின் உருவம் இன்றும் உள்ளது அவர் நேபர்டிடி, அவள் அழகிற்கு காரணம் சந்தனம். பச்சைகுத்தும் முறையில் புதுமையான ஒன்றை கையாண்டாள், சந்தனத்தை மையாக்கி உடலின் பல பாகங்களில் பச்சை குத்தும் முறை மூலம் உடல் வண்ணத்தை பெருக்கிக்கொண்டாள், முசிறி, கொற்கை போன்ற துறைமுகங்களிலிருந்து உயர்தர பக்குவபடுத்தப்பட்ட சந்தனங்கள் Nrரமன்னர்களின் பரிசாக தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது, இந்த மகாராணி பற்றிய விபரங்கள் தமிழகத்தில் இன்றுவரை கிடைக்கவில்லை, ஆனால் எகிப்தில் கடல் கடந்த முதல் மகாராணி என்று பெயர் உடைய ஒரே ஒரு பெண் இவள் தான், ஆனால் இவள் எந்த நாட்டிற்கு பயணம் செய்தார் என்று இன்றுவரை சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை,   
   
"சந்தனத்தின் மீது இவளுக்கு மிகுந்த பற்று இருந்தது தங்கத்தை அடுது சந்தனத்தை உயர்ந்த பொருளாக பார்த்தாள், முகத்தின் சில பாகங்களில் பச்சை குத்துவதன் மூலம் சந்தனமையை உட்செலுத்திக்கொண்டு பிரகாசமான ஒரு முக அழகை பெற்றால், இதன் காரணமாகவே மக்கள் இவளை சூரிய தேவனின் பிள்ளை(நேபார் நேபார் அன்க். -அன்க் என்றால் சூரியன்) என்று அழைத்தனர். சந்தனம் இல்லை என்றால் இப்படி ஒரு பேரழகியை உலகம் கண்டிருக்காது :- சாகிர் ஹவாஸ் எகிப்திய அகழ்வாராய்ச்சியாளர் http://en.wikipedia.org/wiki/Zahi_Hawass (அந்த சந்தனம் நம் தமிழகத்தில் இருந்து தான் சென்றது)

 1. மூலிகையின் பெயர் -: சந்தனம்.

2. தாவரப் பெயர் -: SANTALUM ALBUM.

3. தாவரக்குடும்பம் -: SANTALACEAE.

4. வேறு பெயர்கள் -: முருகுசத்தம் என அழைப்பர்.

5. ரகங்கள் -: இதில் வெள்ளை, மஞ்சளை சிவப்பு என மூன்று வகைகைள் உள்ளன. அதில் செஞ்சந்தனம் மருந்தாகப் பயன்படுகிறது.

6. பயன் தரும் பாகங்கள் -: சேகுக்கட்டை மற்றும் வேர்.

7. வளரியல்பு -: தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது. இது துவர்ப்பு மணமும் உடையது. தமிழகத்தில் தனிப் பெரும் மரமாகும்.
மாற்றடுக்கில் அமைந்த இலைகளை யுடைய மரம். இலைகளின் மேற் பகுதி கரும்பச்சை நிறமாயும் அடிப் பகுதி வெளிறியும் காணப்படும். கணுப்பகுதியிலும் நுனிப் பகுதியிலும் மலர்கள் கூட்டு மஞ்சரியாக காணப்படும். உலர்ந்த நடுக் கட்டை தான் நறுமணம் உடையது. மருத்துவப் பயனுடையது.
இதை காடில்லாத மற்ற இடங்களில் வளர்த்தால் அரசு அனுமதி பெற்றுத்தான் வெட்ட வேண்டும். இதன் விலை மிகவும் அதிகம். இது நன்கு வளர்வதற்கு பக்கத்தில் ஒரு மரம் துணையாக இருக்க வேண்டும். 2-3 ஆண்டுகளில் பழம் விட ஆரம்பிக்கும்.
இந்தப் பழத்தைப் பறவைகள் உட்கொண்டு அதன் எச்சம் விழும் இடத்தில் விதை மூலம் நாற்றுக்கள் பரவும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தான் முழுப் பலன் கிடைக்கும்.

8.மருத்துவப்பயன்கள் -: சந்தனம் சிறு நீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயற்படும். வியர்வையை மிகுவிக்கும், வெண்குட்டம், மேக நீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும். சிறுநீர் தாரை எரிச்சல் சூட்டைத் தணிக்கும், விந்து நீர்த்துப் போதலைக் கெட்டிப் படுத்தும் குளிர்ச்சி தரும். உடல் வெப்பத்தை குறைக்கவும், தோல் நோய்களை நீக்கவும் நறு மணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன் படுகிறது.

முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புக்கள், ஊதுவத்திகள், அலங்கார பொருட்கள், மாலைகள் என மருத்துவம் சாராத பகுதிகளில் பயன் படுத்தப்பட்டாலும், கிருமி நாசினி செய்கை, உடல் அழற்சியை குறைக்கும் தன்மை உடையது.

கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, தவளைச் சொறி, சொறி, படர் தாமரை, வெண்குட்டம், கருமேகம் வெப்பக்கட்டிகள், தீர்ந்து வசீகரமும் அழகும் உண்டாகும்.

பசும் பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டைச் சூடு, மேக அனல், சிறுநீர்ப் பாதை ரணம், அழற்சி ஆகியவை தீரும்.

சந்தனத்தூள் 20 கிராம், 300 மி.லி. நீருல் போட்டுக் காய்ச்சி 150 மி.லி.யாக்கி வடிகட்டி 3 வேளையாக 50 மி.லி. குடிக்க நீர்க் கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு, மந்தம், இதயப் படபடப்பு குறையும். இதயம் வலிவுறும்.

சந்தனத்துண்டுளை நீரில் ஊற வைத்து மையாய் அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் கொள்ள பால் வினை நோய், தந்திபேகம், பிரமேகம், கனோரியா, பெண் நோய் என்று பல பெயர் பெறும் இவை யாவும் குணமாகி உடல் தேறி, நோய் தீரும்.


நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லியில் சுண்டைக்காய் அளவு சந்தன விழுதைக் கலந்து 40 நாள் குடித்து வர மதுமேகம் தீரும்.

சந்தன எண்ணெய்-தைலம் -‘எசன்ஸ்2-3 துளி பாலில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறும். நெல்லிக்காய்ச்சாறு, அல்லது கசாயம் 50 மி.லி. யுடன் அரைத்த சந்தனம் 5-10 கிராம் கலந்து 48 நாள் காலை, மாலை குடிக்க நீரிழிவு குணமாகும்.


No comments: