Tuesday, February 25, 2014

இந்திய ரகசியங்கள் !

1.இந்தியாவில் மிகப்பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.

2,இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.

3.இந்தியாவின் தேசிய விலங்கு புலி, பறவை மயில்.

4.இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் ரெட்கிளிப்.

5.இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் வங்கி.

6.இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்சாண்டர்.

7.1911ஆ‌ம் ஆ‌ண்‌டி‌ல் இரு‌ந்துதா‌ன் புதுடெ‌ல்‌லி இ‌ந்‌தியா‌வி‌ன் தலைநக‌ராக செய‌ல்ப‌ட்டு வரு‌கிறது.

8.இ‌ந்‌திய தே‌சிய‌க் கொடியை வடிவமை‌த்தவ‌ர் சுரே‌ந்‌திரநா‌த் பான‌ர்‌ஜி ஆ‌ண்டு 1906.

9.இ‌ந்‌தியா‌வி‌ல் ர‌யி‌ல் போ‌க்குவர‌த்து இ‌ல்லாத மா‌நில‌ம் மேகாலயா.

10.இ‌ந்‌திய வான சா‌ஸ்‌திர‌த்‌தி‌ன் த‌ந்தை என அழை‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் ஆ‌ரியப‌ட்ட‌ர்.

11.இ‌ந்‌தியா‌வி‌ன் நறுமண‌த் தோ‌ட்ட‌ம் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் மா‌நில‌ம் கேரள‌ம். இ‌ங்கு வாசனை‌ப் பொரு‌ட்க‌ள் அ‌திக‌ம் ப‌யிர‌ட‌ப்படு‌ம்.

12.இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் பேசு‌ம் பட‌ம் இ‌ந்‌தி‌யி‌ல் 1931ஆ‌ம் ஆ‌ண்டு வெ‌ளியானது. பட‌த்‌தி‌ன் பெய‌ர் ஆல‌ம் ஆரா

அறிய வேண்டிய தகவல்கள்!

 1)பிறக்கும்போது மனித உடலில் 300 எலும்புகள் உள்ளனவாம்;வளர்ந்த பின் 206 தான் உள்ளனவாம்!(94 ஐ யாரோ திருடிட்டுப் போயிட்டாங்க போல)

2)மனித இதயம் ஒரு நாளைக்கு 1,00,000 தடவைக்கு மேல் துடிக்கிறதாம்

3)தலை வெட்டுப்பட்டாலும் ஒரு கரப்பு பல நாட்கள் வாழுமாம்;கடைசியில் அது பட்டினியால் சாகிறதாம்!

4)பூமியின் எடை-6,600,000,000,000,000,000,000 டன்களாம்.

5)ஒரு சதுரக் காகித்த்தை ஏழு தடவைக்கு மேல் பாதியாக மடிக்க முடியாதாம்,

6)கிளினோஃபோபியா என்பது படுக்கையைக் கண்டு பயப்படுவதாம்

7)ஒரு வயலினில் கிட்டத்தட்ட 70 மரத்துண்டுகள் உள்ளனவாம்

8)மின்னலால் உண்டாகும் சூடு,சூரியனின் பரப்பில் உள்ள சூட்டை விட 5 மடங்கு அதிகமாம்.

9)சமாதானத்துக்கான நோபல் பரிசு மெடலில் தோள் மேல் கை போட்டு நிற்கும் மூன்று நிர்வாண ஆண்களின் உருவம் உள்ளதாம்

10)உலகில் மிக அதிகமாக உள்ள பெயர் முகமது என்பதுதானாம்

11)சீட்டுக் கட்டில் ஆட்டின் ராஜாவுக்கு மட்டும் மீசை இல்லையாம்.

12)மின்சார பல்ப் கண்டு பிடித்த எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயமாம்

13)உலகில் 10 லட்சம் விதமான மிருகங்கள் உள்ளனவாம்

14)ஒரு சராசரி மனிதன் ஒரு ஆண்டில் 1460க்கும் மேற்பட்ட கனவுகள் காண்கிறானாம்.

15)முள்ளம்பன்றிகள் தண்ணீரில் மிதக்குமாம்.

16)சூரியன் ,பூமியை விட 330330 மடங்கு பெரியதாம்.

17)காட்டுத்தீ,மலையில் கீழ் நோக்கிப் பரவுவதை விட,மேல் நோக்கி வேகமாகப் பரவுமாம்.

18) ஒரு 75 வயது மனிதன் வாழ்வில் 23 ஆண்டுகள் தூங்கியிருப்பானாம்!

18+1))ஆக்டோபஸ்ஸுக்கு 3 இதயங்கள் உள்ளனவாம்

Monday, February 17, 2014

ஆய கலைகள் 64

1. எழுத்திலக்கணம்(அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுனசாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்தியசாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவசாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப்பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவபரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல்(பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப்பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவவாதம்)
44. பிறவுயிர்மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துகவாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப்பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல்(பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை(மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62.புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப்பிரயோகம்) -

Tuesday, February 04, 2014

பழைய பார்வைகள்

கரங்கள் பற்றி
கடைசியாய் எச்சில் படுத்தாமல்
முத்தமிட்டு கரைந்தபடி
விடைபெற்ற நாளில்
கலைந்து போனதா
உன் விழிகளில் வாழ்ந்த
காதல் மூலாம் ?

இப்போது எதிர்படுகையில்
தென்படுவதில்லை
பழைய பார்வைகள் '
திருவிழா முடிந்த ஆலய வளாகமாய்
சோபை இழந்து கிடக்கிறது கண்கள்

சோகம் சோடித்தமுகத்தொடு
உன்னை காண்கையில் எல்லாம்
கொழு அறுத்த புழுவாய் துடிக்கிறேன்

செவ்விந்திய இனம்போல
உன் சிரிப்பு அழிந்தே போனதடி

நீ இல்லாத தோல்வியை
புன்னகை வேசம் அணிந்தே ஊருக்கு
சரமாரியாய் சமாளிக்கிறேன்

ஒருவார்த்தை பேசமாட்டாயா ?
என துடித்தாலும்
உன் சந்தேக புருஷன் பற்றி
அறிந்திருப்பதால்
அந்த சலனமான ஆசையை நிறுத்தி விடுகிறேன் ...

ஒருநாள்
என்னை கடந்த ஒரு நொடியில்
என் பெயர் சொல்லி அழைத்தாய் .
பட்டாம் பூச்சிகள் இதயத்தில்
சிறகடிக்க திரும்பி பார்த்தேன் .

நடை பாதை விட்டு
வீதிக்கு ஓடிய உன்
கடைசி பிள்ளையை துரத்தி
பிடித்தபடி நீ என்னை கவனிக்க வில்லை ...

உன் இறுதி வரைக்கும்
என் பெயரை உச்சரிக்க வேண்டும்
என்ற ஆசையில்
உன் பிள்ளைக்கு என் பெயரை சூட்டி இருக்கிறாய்
என்பதை நான் அவதானித்தேன் ...

நானும் வேற்றூர் போக தீர்மானம் செய்திருக்கிறேன் ...
என்னை உன் கண்களில் வீழ்த்துவதால் தானே
இன்னும் உன் காயங்கள் ரணமாகின்றன
அதற்காகவே ...

வாகை காட்டான்

சுதந்திரதின வாழ்த்து புகைப்படம்


நண்பர்கள் தின வாழ்த்து புகைப்படம்


இயற்கைகாட்சி புகைப்படம்


தொட்டால் சிணுங்கி செடி புகைப்படம்

கிருஷ்ண ஜெயந்தி புகைப்படம்

இயற்கைகாட்சி புகைப்படம்


இயற்கைகாட்சி புகைப்படம்


விநாயகர் புகைப்படம்

இயற்கைகாட்சி புகைப்படம்

புன்னகை தேசம்

எவ்வளவு சிந்தினாலும்
தீர்வதில்லை
அள்ளக்குறையாத புன்னகை

மொட்டாகவேயிருந்து
நீ பார்த்தபின்பே
மலர்கின்றன இதழ்கள்

நான் அதிகம் அணிந்திடாத
புன்னகையை அணிவித்து
அழகு பார்ப்பது நீ

என் புன்னகையின் மதிப்பு
உயர்ந்துகொண்டேயிருக்கும்
உன்னிடத்தில் மட்டும்

உனக்கு நகைச்சுவையுணர்வு அதிகமாம்
சுவைக்கக்கூடுமென்ற காத்திருப்பில்
புன்னகை இதழ்கள்

Gauthaman DS Karisalkulaththaan