Monday, December 16, 2013

அனைத்துமாய் அவள் என்னுள்ளே


எங்கும் நிறைந்தவன்
இறைவன் ஒருவனே என்பார்கள்

எனது உலகின்  
எலாவிடத்திலும் நிறைந்திருப்பது
நீதான் பெண்ணே

எப்படி என்று கேட்கிறாயா
இதோ சொல்கிறேன் கேளடி ....

யாருமில்லா தனி அறையில்
ஏதேனும் ஓரிடத்தில் மோதிவிட்டு
உன்னிடத்தில் மன்னிப்பு கேட்டு
தலை சொரிகிறேன்
நீயோ
வலி நிவாரணம் ஒன்றை
என் நெற்றியில் தெய்கின்றாய்

கல்லூரி பாடப்புத்தகத்தில்
புரட்டிய பக்கமெல்லாம்
எனது நினைவலைகளில்
பதிந்துள்ளனவா என
ஒத்திகை பார்க்கையில்
நான் சொல்வது தவறென்று
என் தலையில் கொட்டுகின்றாய்

அதிகாலை கதிரவன்
என் வீட்டு ஜன்னலின் வழியே
நேரம் அறியாமல் உறங்கும்
எனை எழுப்ப முயல்கிறான்
முடியாமல் போகவே
நீயும் வருகிறாய் ....
போர் வீரனாய்
உனது முயற்சியும்
தோல்வியை தழுவிட
ஒரு குவளை நீரில்
என் தூக்கம் கலையச் செயகிறாய் .

எப்பொழுதும் எனைபிரியாமல்
என்னவளாய் நீ வேண்டுமென
இறைவனை வேண்டுகையில்
இடையினில் தோன்றி
இல்லாத ஒன்றாய்
இறைவனிடம் கேள் என்கின்றாய்

எனது அலைபேசி
வெகுநேரம்
சிணுங்கி கொண்டிருந்தும்
தொடர்பு கொள்ளாமல் விட்டதைஎன்னி
வீடு சென்றவுடன்
அன்னையவள் திட்டினால்,  
மழலை மொழியில்
நீ சொல்லும் கதைகள் கேட்பதற்கென
எனது அறை கதவுகளை போலவே
எனது காதுகளுக்கும்
தாழிட்டுவிட்டேன் என்பது
பாவம்
என் அன்னையவளுக்கு
எப்படிதெரியும்.

விடுமுறை நாட்களில்
விரல்நகம் பற்றிக்கொண்டு
வீதியெங்கும்
உலாவருகின்றாய்
என்னுடன்
நிகழ்வுகளை ரசித்தவாரே ....

மனித சாதியில்
மாலாத்துயரமேன்பது
ஒருவரின்
மரணம் தான் என்பார்கள் ,
அதைவிட கொடிது பெண்ணே
உனது பிரிவு

அவ்வப்போது
சில வினடிப்பொலுதுகலில்
நீ எனை விட்டு
பிரிந்து சென்றதை எண்ணி
அழுதுகொண்டே முடங்கிக்கிடப்பேன்
ஓர் மூலையில்
முடவனைப்போல் .....

அந்த நொடிப்போளுதுகளிலும்
என் கண்ணீர் துடைத்து
எனை தேற்றுவாய் பெண்ணே ........

இப்படித்தான்
அவள் என்னுடன்
நிறைந்து நிற்கிறாள் ..............
அனைத்துமாய் .

வெ. பழமுதிர் கண்ணன்   (F...K....)

துணை நிற்பாய் ஈசனே !


"பா"க்கள் பல்லாயிரம்
பைந்தமிழில் நான்
பாடுவேன் எம் ஈசனே !
அண்டத்தில்
பிண்டமாய் திக்கற்று
திசை அறியாமல்
சுற்றியவன் நானே !
என் சுயமறிய செய்தவன்
நீதானே பரமனே !
அமுதும் நஞ்சும்
வேறல்ல உனக்கு;
இம்மையும் மறுமையும்
மாற்றல்ல எனக்கு;
உயிரினங்கள் அன்பில்
உயிர்ப்புற்று;
சீவன்கள் செழிப்புற்று
வாழ்ந்திட;
நித்தமும் துணை
நிற்பாயே !

தமிழர் எம் தாகம்


விம்மல்களைஅடக்கி கொண்டு
விளக்கேற்றும் திருநாள்...

செம்மல்களே உங்களுக்காய்
தீபமேற்றும் பெருநாள்...

காவல் தெய்வங்களே..!
கல்லறை மனிதர்களே..!
உங்களை எண்ணாமல்
நொடிகள் கடந்ததில்லை...

உறங்கி ஒருகணமும்
உம் நினைவுகள் கிடந்ததில்லை...
கனவுகள் சுமந்து
காவல் செய்த வீரர்களே...

இளமையின் ஆசை வாசல்களை
எல்லாம் மூடி முடக்கிவிட்டு
இனத்தின் சுதந்திரத்துக்காய்
இன்னுயிர் ஈந்த தியாகிகளே...

ஈழ குழந்தைகளே..!
எங்கள் உறவுகளே..!
என்றும் எம் நினைவில் இருந்து
விலகாத தேச புதல்வர்களே...

நீர் சிந்தும் கண்களும்
நெருப்பு ஏந்திய நெஞ்சுமாய்
உங்கள் முன் நின்று தொழுகின்றோம்...
உங்கள் கனவுகள் மெய்ப்பட...

உங்கள் கனவுகள் தாகமாய்
நம் நெஞ்சில் வாழ்கிறது...
காலத்தை எதிர்பார்த்து
கடமை செய்ய விளைகிறது...

விடியும் ஒருநாள்
உங்கள் ஈழம்...
முடியும் ஒருநாள்
உங்கள் இனத்தின் சோகம்...

உங்கள் முகம் காட்டி
மீண்டும் உறங்குங்கள்...
தமிழீழ தனியரசை
உங்கள் பாதங்களில்

காணிக்கை ஆக்குகின்ற
காலம் மிக விரைவில்
உங்கள் கனவு......

வாகை காட்டு கவிஞன்

அதிகாலை கனவு...


"நீல வான்வெளியில்
இரு கருமை
நிறவண்டுகள்"
பூக்கள் நிறைந்த
அழகு சோலையிலே
சுற்றியது
இன்று அதிகாலையிலே...

கட்டி அனைக்கும்
தூரத்தில் பூக்கள்
இருந்தபோதும்
முத்தமிட முடியவில்லை
மூச்சுவிட முடியவில்லை...
முட்டி மோதிகிறது
என் நினைவு
இவையெல்லாம்
என் "அதிகாலை" கனவு...

என் உடலில் சில சில மாற்றங்கள்
மருந்துகள் சுழற்ச்சி முறையில் -ஏற்றங்கள்
சில்லறையாய்
அவ்வப்போது மாத்திரைகளுடன் விலைபேசப்படுகிறது
என்றோ மண்ணில் புதையும்
விலையில்லா இவ்வுடலை---இதனால்
முகம் காட்டவும்
முடியவில்லை முகநூலில்
சிறு விடுமுறையால்
அதிகாலை வரை
மூடியே கிடக்கிறது
என் இருவிழிகள்.....

ஒரு கட்டெறும்பும்
எங்கோ
கடிக்கிறது
மற்றொன்று இடது
காதில்
ஒய்யாரமாய்
நடக்கிறது
இதற்கிடையெ
என் விழிகளும்
ஏதோ நடிக்கிறது
மொத்தத்தில்
எழவும் உடல் மறுக்கிறது...

(ஆனால்)

பக்கத்து வீட்டு
சிறுவன்
பள்ளியிலே நேற்று
முண்டாசு கவிஞன்
மாறு வேடமிட்டு
மாற்றுதிறனாளியாய்
அவன்
இருந்தபோதும்
உடலினை
மாற்றம் செய்து
வாங்கிய முதல் பரிசு
கட்டெறும்பாய்
என் காதினில்
செய்தி ஊர்ந்து
சென்று
கண்ணத்தில்
விழுந்ததால்
ஏற்பட்டது சிறுபள்ளம்
இதையறிந்து விழிகள்
விழித்தயிடம்  இல்லம்

எழிலன்