பொதுவாக ஒருவரின் ஒரு நாள் செயல்பாட்டிற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. உடலில் தண்ணீர் இல்லாமல் இருந்தால், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதேப் போன்று அளவுக்கு அதிகமான தண்ணீர் குடித்தாலும், பிரச்சனைகள் நேரிடும். எனவே ஒரு நாளைக்கு ஒருவர் தன் உடல் எடைக்கு ஏற்ற எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இத்தகைய தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட. மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா? பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிதும் உதவியாக இருக்கும்.
இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் முறையானது ஜப்பானில் இருந்து வந்ததாகும். ஜப்பானிய மக்கள் தான் தினமும் காலையில் முகத்தை கழுவியதும் பற்களை துலக்காமல் கூட, 4 டம்ளர் தண்ணீரை குடிப்பார்கள். மேலுடம் அப்படி குடித்த பின்னர் 1 மணிநேரத்திற்கு எதுவும் சாப்பிடமாட்டார்கள்.
இதற்கு பெயர் தான் தண்ணீர் தெரபி. இதனால் தான் ஜப்பானிய மக்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கின்றனர். இங்கு அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து இனிமேல் காலையில் வெறும் வயிற்றில் தவறாமல் தண்ணீரை குடித்து வாருங்கள்
குடல் சுத்தமாகும்
அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடலானது சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானது முற்றிலும் வெளியேறிவிடும்.
நச்சுக்களை வெளியேற்றிவிடும்
தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். இதனால் உடலானது நச்சுக்களின் சுத்தமாக இருக்கும்.
பசியைத் தூண்டும்
தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.
தலைவலியை தடுக்கும்
பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலியானது குறையும்.
அல்சரைத் தடுக்கும்
காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.
மெட்டபாலிசம் அதிகரிக்கும்
காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிக் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும். இதனால் உண்ணும் உணவானது விரைவில் செரிமானமடைந்துவிடும்.
இரத்த செல்கள் உற்பத்தியாகும்
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.
எடையை குறைக்க உதவும்
எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
பொலிவான சருமத்தைக் கொடுக்கும்
குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.
தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களுக்கு நல்லதா?
உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது.
மேலும் குழம்பு, ரசம், மோர் போன்ற திரவ உணவுகள் மூலமும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்துவிடுகிறது.
எனக்குத்தாகமே எடுப்பதில்லை. அதனால் தான் தண்ணீரே பெரும்பாலும் குடிப்பதில்லை என சிலர் ஆறு மணி நேரத்துக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள் இது தவறு.
ஏனெனில் ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலிலிருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும்.
ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால்தான் இயல்பு நிலை என்று அர்த்தம். இதய நோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை உடலுக்கு நல்லது. நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதற்கு மேல் உடலுக்கு குடிநீர் தேவை இல்லை.
சிறுநீர் கழிக்கும் இடைவெளி
ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி வரை நேரத்துக்கு ஒரு முறைதான் சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையோ சிறுநீர் கழிக்க நேர்ந்தால் அதை அடிக்கடி எனக் கொள்ளலாம்.
அடிக்கடி சிறுநீர் கழித்தால் மருத்துவரிடம் அவசியம் ஆலோசனை பெற வேண்டும்.
குளிர் நீர் குடித்தால் எடை கூடுமா?
தண்ணீர் தேவையில்லையா?
இது உணவு செரிமானத்துக்கு மட்டுமே. மற்றபடி வேலை, வியர்வை போன்றவற்றையும்சேர்த்துக் கணக்கிட்டால், குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அவசியமாகிறது.
தண்ணீரால் என்ன நன்மைகள்?
நிறைய தண்ணீர் குடிப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். அவர்களுக்கு பருமன்வராது. குறிப்பாக காலையில் எழுந்ததும் 2 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்தால்,உள் உறுப்புகள் சுத்தமாகும். வளர்சிதை மாற்றச் செயல்பாடு மேம்படும்.
உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யாமல், குளிர்ச்சியாக வைத்திருக்கவும் தண்ணீர் உதவுகிறது. அதிலும் வெயில் காலத்தில், உடல் வெப்பநிலை எகிறாமலிருக்க,தண்ணீர் அவசியம் என்பதால்தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் எனவலியுறுத்தப்படுகிறது.
நமது உடலில் 60 சதவிகிதம் தண்ணீர் இருக்கும். அந்த அளவு எப்போதுவேண்டுமானாலும் அதிகரிக்கலாம். குறையவும் செய்யலாம். அதிகமாவதை நீர்கோர்ப்பு (வாட்டர் ரிட்டென்ஷன்) என்றும், குறைவதை உடலில் நீரற்ற வறட்சி நிலை(டீஹைட்ரேஷன்) என்றும் சொல்கிறோம்.
நீர்கோர்ப்புக்கான காரணங்கள்…
உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வது, மசாலா அதிகமுள்ள உணவு, அரிசி போன்ற எளிதில் ஜீரணமாகும் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்பது, பருமன், நீண்ட நேரம் நின்றபடியோ, நடந்து கொண்டோ, உடலை வருத்தி வேலை பார்ப்பது, ஒரே நிலையில்உட்கார்வது, சிலருக்குத் தூங்கி எழுந்ததும், முகமெல்லாம் வீங்கினாற்போல இருக்கும்.
களைப்பாகவே உணர்வார்கள். இதெல்லாம்உடலில் தண்ணீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்னைக்கான அறிகுறிகள்.
சிறு நீரகக் கோளாறு உள்ளவர்கள்,பருமனானவர்கள், ஹைப்பர் டென்ஷன் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த அறிகுறி இருந்தால், அதுஅவர்களது நோயின் விளைவாக இருக்கலாம். மருத்துவரைக் கலந்தாலோசித்த பிறகே எதையும்செய்ய வேண்டும்.
மற்றபடி நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் உள்ளவர்கள் இப்படி உணர்ந்தால்,அவர்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
அரிசி உணவைக் குறைத்து, கோதுமை, கேழ்வரகு, ஓட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். கீரை மாதிரியான நார்ச்சத்துமிக்க உணவுகள் அவசியம். உப்பின் அளவை உடனடியாகக் குறைத்தாக வேண்டும்.தண்ணீர் கோர்த்துக் கொள்வது எத்தனைஆபத்தானதோ, அதே மாதிரிதான் நீரற்ற வறட்சி நிலையும்.
10 நபர்களில் ஒருவருக்கு இப்பிரச்னை வருகிறது. மயக்கம், தலைசுற்றல், களைப்பு,தலைவலி போன்றவை இதன் அறிகுறிகள். சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடலில்தண்ணீர் வற்றும்போது தீராத தலைவலி வரும். உடலுக்குத் தேவையான தண்ணீர் சேர்ந்தபிறகுதான், அந்தத் தலைவலி நீங்கும். அதிக வெயில் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியஇரு விஷயங்களினால் தான் பெரும்பாலும் உடலில் தண்ணீர் வற்றும். நாக்கு வறண்டுபோவது, உதடுகள் வெடிப்பது, இதயத்துடிப்பு அதிகமாவது, சிறுநீர் அடர்த்தியாக வெளியேறுவது போன்றவையும் இதன் விளைவுகளே…
நம்மில் பலரும் செய்கிற தவறு என்ன தெரியுமா?
தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிப்பது. அப்படியில்லாமல், அடிக்கடி தண்ணீர்குடிக்கப் பழக வேண்டியது அவசியம். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு டீஹைட்ரேஷன்பிரச்னை ரொம்ப சுலபமாக வரலாம். அதன் அடுத்த விளைவாக நுரையீரல் புற்றுநோய் தாக்கலாம். புகையை நிறுத்துவதும், அதிக தண்ணீர் குடிப்பதும்தான் தீர்வு. எப்படிக்குடிப்பது?தினம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமானாலும், எல்லோராலும் வெறும்தண்ணீரைக் குடிக்க முடியாது.
சிலருக்கு தண்ணீர் குடிப்பதென்றாலே வாந்தி வரும். என்ன செய்ய?
ஒரு லிட்டர் தண்ணீரில் கால் மூடி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, ஒரு சிட்டிகை உப்புசேர்த்து அவ்வப்போது குடிக்கலாம். 100 மி.லி கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் 1 லிட்டர்தண்ணீர் விட்டு, நீர் மோராக்கி, அடிக்கடி சிறிது சிறிதாகக் குடிக்கலாம்.
சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆற வைத்த தண்ணீரைக் குடிக்கலாம். சுவையாகவும் இருக்கும். செரிமானத்துக்கும் நல்லது. உடல் வறட்சியைப் போக்க இளநீரைப் போன்றமகத்தான திரவம் வேறில்லை. வெயிலின் கடுமையை விரட்ட,
குளிர் பானங்களைக் குடிப்பதைத் தவிர்த்து இளநீர் குடிப்பதே சிறந்தது.சத்து?இத்தனைமகிமை வாய்ந்த தண்ணீரில் ஏதேனும் சத்துகள் இருக்கிறதா எனப் பார்த்தால் இல்லை. ஆனால், தண்ணீர் அதிகமுள்ள காய்கறி, பழங்களுக்குப் பஞ்சமே இல்லை. அவற்றைச் சாப்பிடுவதன் மூலம் தண்ணீர் தேவையும் பூர்த்தியாகும். காய்கறி, பழங்களில் உள்ளசத்துகளும் உடலுக்குப் போகும். பூசணிக்காய், சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய்போன்ற காய்கறிகளிலும், தர்பூசணி, கிர்ணி, பேரிக்காய் போன்ற பழங்களிலும் தண்ணீர்அதிகம். ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம்,வறட்சியும் போகும். வைட்டமின் சி சத்தும் சேரும்.
குளிர் நீர் குடித்தால் எடை கூடுமா?
அப்படியெல்லாம் இல்லை. குளிர்ந்த தண்ணீரோ, வெந்நீரோ எதுவானாலும், அதை, நம்உடல், தன்னுடைய வெப்பநிலைக்கு மாற்றித்தான் உபயோகிக்கும். வெந்நீர் குடித்தால்,கொழுப்பு சேராது என்று சொல்வதன் பின்னணியும் இதுதான். வெந்நீரை தனதுவெப்பநிலைக்கு மாற்றும் வளர்சிதை மாற்ற இயக்கம் அதிகரிப்பதால், உடலில் கொழுப்புதங்குவதில்லை.
யாருக்கு தண்ணீர் கூடாது?
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், இதய நோயாளிகளுக்கு (இதயத்தின் சுருங்கி விரியும் தன்மை 30க்கும் குறைவானால்) நாளொன் றுக்கு 1,000 மி.லி. தண்ணீர் மட்டுமே அனுமதி. அது அவர்கள் மருந்து எடுத்துக்கொள்ள, சமைக்க என எல்லாம் அடக்கியது. அளந்து அளந்துதான் எடுத்துக் கொள்ள வேண்டும். கிட்னி பாதித்தவர்களுக்கு, பாதிப்பின் தீவிரம்பொறுத்து, தண்ணீரின் அளவு 500 மி.லி. வரை குறைக்கப்படவும் கூடும்
குழந்தைகளுக்குத் தண்ணீர்?
பள்ளிக்கூடம் செல்கிற குழந்தைகள், பள்ளிக் கழிவறையின் சுகாதாரமற்ற சூழலுக்குப்பயந்து, சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்க, தண்ணீரே குடிக்க மாட்டார்கள். இது மிகவும் தவறு. தண்ணீரே குடிக்காமலும், சிறுநீரை அடக்கியும் பழகினால், மிக இளம் வயதிலேயேயூரினரி இன்ஃபெக்ஷன் வரும்.
சிறுநீர் கழிக்கும்போது வலி, கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் வெளியேறுவது,அடர்த்தியாக, அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது போன்றவை இன்ஃபெக்ஷனுக்கானஅறிகுறிகள். அந்த அளவுக்குப்போக விடாமல், முன்கூட்டியே அடிக்கடி தண்ணீர் குடிக்கப்பழக்குவது ஆரோக்கியமானது.